தமிழகத்தில் வெயில் குறையும்!..

wethar
பருவ மழை பொய்த்ததால், இந்த ஆண்டு கடுமையான வெயில் நிலவி வருகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, நாடு முழுவதும் இந்தாண்டு, சராசரியை விட அதிகளவு வெயில் வாட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்தது.

குறிப்பாக, கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதற்கு பிறகு வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிகிறது. இதனால், வெயிலின் தாக்கம் குறையுமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும். இதையடுத்து, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, உள் மாவட்டத்தில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்புள்ளது.

Leave a Response