83 ஆண்டுக்கு பிறகு விடிவுக்காலம் பிறக்கும் மேட்டூர் அணை…!

mettur1_09280
பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இன்று தூர்வாரப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் மீதுள்ள மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. மேட்டூர் அணையால் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் காவிரிப் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் அணை தூர்வாரப்படாததால் வெள்ளப்பெருக்கு, மழை காரணமாக, 20% அளவுக்கு சகதி படிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் முழுக்கொள்ளளவுக்கும் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.

இந்நிலையில் 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரும் பணி இன்று தொடங்குகிறது. மேலும் அணையில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர். மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் இனி வரும் நாட்களில் கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி தென் மேற்கு பருவ மழை அடுத்த வாரம் தொடங்கும் என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் தண்ணீரை தேக்க முடியும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Response