என்னாது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிராவா…

swaathi
ஐடி ஊழியர் ஸ்வாதி கொலை சம்பவம் நடந்து 11 மாதத்திற்கு பிறகு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கி உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் ஸ்வாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்கள் இல்லாததால் ரயில்வே போலீசார் துப்பு துலக்க கடுமையாக திணறினர்.

இதனையடுத்து கொலை வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், முக்கிய இடங்களிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துமாறு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து நிர்பயா திட்டத்தின் மூலம் 67.94 கோடி ரூபாய் செலவில், சென்னை கோட்டத்தில் உள்ள 82 ரயில் நிலையங்களில், ஆயிரத்து 300 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 6 மாதத்தில் சிசிடிவி கேமிராக்களை பொருத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது ஸ்வாதி கொலை நடந்து 11 மாதத்திற்கு பிறகு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் 24 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

Leave a Response