பாலுக்காக தவித்த பச்சிளம் குழந்தை: இறந்து கிடந்த தாய்…

thaai2
ம.பி., தலைநகர் போபால் அருகேயுள்ளதாமோ என்ற நகரில் ரயில் தண்டவாளம் அருகே பெண் ஒருவர் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவர் அருகில் இருந்த அவரது ஒன்றரை வயது குழந்தை பிஸ்கட்டை கொறித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் தனது தாய் இறந்தது தெரியாத அக்குழுந்தை, அழுதவாறே தாயாரை எழுப்ப முயற்சி செய்ததுடன், அவரிடம் பால் குடிக்கவும் முயற்சி செய்தது. இதனை அங்கிருந்த சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டடனர்.

இதனிடையே, அந்த பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து அல்லது அடிபட்டு இறந்திருக்கலாம். அவரது தலையில் காயம் இருந்தது. தான் அடிபட்ட நிலையிலும் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அடிபட்ட பின் சிறிது நேரம் நினைவில் இருந்த அந்த பெண், மகனுக்கு பால் கொடுக்க முயற்சி செய்திருக்கலாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர். போலீசார், இறந்த பெண்ணின் உடலை எடுத்து சென்ற போது, அக்குழுந்தை கதறியழுததை பார்த்து அங்கிருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது, குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர். பெண்ணின் உறவினர்கள் யாரும் உள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் அருகே கிடைத்த பர்ஸ் மட்டும் போலீசாருக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தில், மற்றொரு செய்தி பரவி வருகிறது. அதில் இறந்த பெண்ணுடன் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கிருந்தவர்கள் குழந்தையை அனுமதிக்க மறுத்தனர். ரூ.10 கட்டணம் செலுத்தினால் மட்டுமே குழந்தையை அனுமதிக்க முடியும் என நிர்வாகம் கூறியுள்ளதாகவும், ஊழியர் ஒருவர் அந்த பணத்தை செலுத்தியதாகவும் அந்த செய்தி பரவுகிறது.

Leave a Response