பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூப்லைட்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (மே 25) வெளியாகும் என இயக்குனர் கபீர் கான் தெரிவித்துள்ளார்.
கபீர்கான் இயக்கத்தில் எல்லை போரில் மலரும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘டியூப்லைட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தணிக்கைக் குழுவின் சான்றிதழை கபீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக ‘டியூப்லைட்’ படத்தின் டிரைலர் மே 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான ரேடியோ பாடல் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து டிரைலர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், டுவிட்டரில் இப்படத்துக்காக பிரத்யேகமாக சல்மானின் இமோஜி ஒன்று வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.