சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி…

kumbakarai
தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, வெள்ளகவி, வட்டக்கானல் பகுதியில் இருந்தும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்தும் நீர்வரத்து இருக்கும்.

அருவிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள்.

இதனிடையே, நீர்வரத்து குறைந்ததால் கடந்த மாதம் ஏப்ரல் 24-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடையை நீக்கி, கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Response