காவலர் பணி எழுத்துத்தேர்வில் திடீர் மாற்றம்…

kavalar
காவலர் பணியில் என்னடா மாற்றம் பாக்குறிங்க்ளா. அது என்னனா வரும் 21ம் தேதி காவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு 1:5 என்ற விகிதத்தில் அடுத்த கட்டத்தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர் என தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

இத்தேர்வில் 10ம் வகுப்பு கல்வித்தகுதி என்பதால் சுமார் 6.5 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த வாரம் இதற்கான நுழைவுச்சீட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வைப் பொருத்தளவில் 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொது அறிவு 50 மதிப்பெண்ணிற்கும், உளவியல் 30 மதிப்பெண்ணிற்கும் இருக்கும். இதில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இருப்பினும் போட்டி அதிகம் என்பதால் மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்புவாரி விகிதாச்சாரப்படி அதிக மதிப்பெண் முறையில் 1:5 என்ற அடிப்படையில் தேர்வு செயயப்படுவர்.

இவர்கள் மட்டுமே அடுத்தகட்டத் தேர்வான உடல்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு, உடல்திறன் போட்டி உள்ளிட்டவற்றிற்கு அழைக்கப்படுவர். இத்தகவலை சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

Leave a Response