இந்தியாவின் சிறந்த டாப்-10 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டிக்கு இரண்டாவது இடம்!..

iit-chennai
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்ந்தெடுத்துள்ள இந்தியாவின் சிறந்த டாப்-10 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் சிறந்த டாப்-10 கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். இதன்படி இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தை சென்னை ஐ.ஐ.டி பெற்றுள்ளது. இந்த டாப்-10 பட்டியல்கள் பின்வருமாறு:

10. பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம், வாரணாசி, உத்தரபிரதேசம்

9.ஐ.ஐ.டி, ரூர்க்கி,உத்தரகாண்ட்

8.ஐ.ஐ.டி, கவுகாத்தி, அசாம்

7.ஐ.ஐ.டி, கான்பூர், உத்தரபிரதேசம்

6.ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்,புது டெல்லி

5.ஐ.ஐ.டி, புது டெல்லி

4.ஐ.ஐ.டி, காரக்பூர், மேற்கு வங்காளம்

3.ஐ.ஐ.டி, மும்பை, மகராஷ்டிரா

2.ஐ.ஐ.டி, சென்னை, தமிழ்நாடு

1.ஐ.ஐ.எஸ்.சி, பெங்களூரு, கர்நாடகா

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் அடங்கிய கையேடு வரும் 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதே நாளில் டெல்லியில் நடைபெற உள்ள விழாவில், இந்த கல்வி நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதளித்து கவுரப்படுத்த உள்ளார்.

Leave a Response