கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக குவிந்த இளைஞர்கள் கைது!!!

vi
தமிழகத்தில் பருவ மழை இன்றி விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக மாநிலம் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு தர வேண்டிய போதிய வறட்சி நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே, விவசாயிகளின் 7000 ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இவர்களுக்கு ஆதரவாகவும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவையில் உள்ள வஉசி மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் கூடி போராட்டம் நடத்துவது என்று நேற்று சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி இருந்தனர். இதையடுத்து, வஉசி மைதானம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மாணவர்கள் வந்துள்ளர்களா என்பதை அறிந்து போராட்டத்தில் கைகோர்க்க மாணவர்கள் வந்த வண்ணம் இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கிடையே, இளைஞர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் குவிந்தனர். அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் கோவை வஉசி மைதானத்தில்தான் பெரிய அளவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response