ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!

iskel
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று, அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி வெயிலும், வேலூரில் 100.04 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், சென்னை விமான நிலையத்தில் 93 டிகிரி வெயிலும் அடித்தது. கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரியும் வெயில் பதிவானது.

Leave a Response