“வாங்க வாங்க” படத்தின் திரைவிமர்சனம்

vaangaa
இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் சீரழிவது இணையத்தளத்தின் (INTERNET) மூலம் தான். இருந்தாலும் பல விதமான புரட்சிகளை உருவாக்குவதும் இந்த இணையதளமுலம் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பேஸ்புக் மூலம் சில நன்மைகள் இருந்தாலும் பல தீமைகள் அடங்கிய அழகிய சூறாவளிதான் இது என்பதை உணர்த்துகிறது இந்த “வாங்க வாங்க” திரைப்படம்.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார் அப்புகுட்டி. இவர் சொல்லும் ஒரு பேய் கதையில்தான் படத்தின் திரைக்கதை நகர்கிறது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிவேதிதா மற்றும் மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக்கில் ஆண்களை கவர்ந்து அவர்களை மடக்கி பணம் சம்பாதிப்பதுதான். மதுசந்தாவிற்கு இது கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும் நிவேதிதாவின் பேச்சை கேட்டு இவரும் அந்த தவறுக்கு துணை போகிறார். இதில் முதல் விக்கெட் கராத்தே ராஜா தான்.

பேஸ்புக் காதலி மதுசந்தாவை பார்க்க ஆர்வத்தோடு அவர் வீட்டுக்கு வருகிறார் கராத்தே ராஜா. அன்று இரவு அவர் வீட்டில் தங்க முடிவெடுத்து இரவு சந்தோசமாக இருப்பதற்கு ரெடியாகிறார். அப்போதுதான் அந்த வீட்டில் ஒரு பேய் இருகிறது.அந்த விஷயம் கராத்தே ராஜாவுக்கு நிவேதிதாவுக்கும் தெரிய வருகிறது. இருந்தும் அந்த பேய் கராத்தே ராஜாவை மட்டும் கொன்று விடுகிறது. அடுத்ததாக நிவேதிதா காதலிக்கும் அவருடைய காதலனும் அந்த வீட்டிற்கு வந்து. அவரும் மர்மமான முறையில் அந்த பேய் மூலம் கொல்லப்படுகிறார். ஏன் ஆண்களை மட்டும் குறி வைத்து அந்த பேய் கொலை செய்கிறது என்பதை அப்பா செண்டிமெண்ட்டை ப்ளாஷ்பேக்கில் வைத்து கூறியிருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.

பவர் ஸ்டாருக்கு, அப்புகுட்டிக்கும் படத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும் அவர்களுக்கான பணியை திறம்பட செய்திருக்கிறார்கள்.

நம் சமூகத்திற்கு ஒரு பாடம் சொல்லி தர வேண்டும் என்ற ஒரு வித முனைப்போடுதான் இந்த கதையை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். பேஸ்புக், ஹவாலா என்று இரண்டையும் ஒரே படத்தில் கூறியிருப்பது மிக மிக அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்திற்குதான் பலம் அதிகம் இருக்கும் என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக “அப்பனும் நீதான்” பாடல் மனதை கனமாக்குவது உறுதி.

Leave a Response