முக்கிய பணியிடங்கள் அனைத்தும் காலி! தள்ளாடுகிறதா தமிழக சுகாதார துறை?…

health dep
தற்போது நிர்வாக துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர், இணை இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தமிழக சுகாதாரத் துறை செயல்பாடுகளில், பெரும் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், இனம் புரியாத மர்ம காய்ச்சல் என, தினமும் மக்கள் திண்டாடி வருகின்றனர். பாதிப்பில் இருந்து தப்ப, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிகின்றனர். ‘தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் போலி டாக்டர்களின் ஆதிக்கத்தால், நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது’ என, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், சுகாதாரத் துறையில், நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, பெரும்பாலான பணியிடங்கள் காலியாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர், இணை இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தமிழக சுகாதாரத் துறை செயல்பாடுகளில், பெரும் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், இனம் புரியாத மர்ம காய்ச்சல் என, தினமும் மக்கள் திண்டாடி வருகின்றனர். பாதிப்பில் இருந்து தப்ப, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிகின்றனர். ‘தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் போலி டாக்டர்களின் ஆதிக்கத்தால், நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது’ என, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், சுகாதாரத் துறையில், நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, பெரும்பாலான பணியிடங்கள் காலியாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆறு மாதங்கள் முதல், ஓராண்டு வரை, பல முக்கிய பணியிடங்கள் காலியாக இருந்தும், அரசு ஏன் அலட்சியம் காட்டுகிறது என, தெரியவில்லை. சில மாதங்களில் ஓய்வு பெறுவோரை நியமிப்பதே, சிக்கலுக்கு காரணம். குறைந்தபட்சம், இரு ஆண்டுகளாக அந்த பதவியில் நீடிக்கும் வகையில், இந்த இடங்களை நிரப்பினால் சிக்கல் தீரும் என்று தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறியுள்ளார். தமிழக நிர்வாகத்துறையின் அனைத்து முக்கிய இடங்களும் கூடியவிரைவில் நிரப்பப்படுமா??என்பது மக்களின் கேள்விக்குறியாகவே உள்ளது!…

Leave a Response