என்னுடைய வருகையின் நோக்கம் அரசியல் இல்லை! நெடுவாசல் மக்களில் ஒருவனாக மட்டுமே!! – ஸ்டாலின்….

e9980877-e45f-4995-be8d-5310e88d19f1
இது மக்களின் போராட்டம்.இங்கு நான் அரசியல் பேச வரவில்லை.இங்கு நான் மக்களின் ஒருவனாக ஆதரவை தெரிவிக்கத்தான் வந்துள்ளேன்.” என நெடுவாசலில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று காலை 12 மணியளவில் 16-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நெடுவாசல் போரட்டக்களத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்,மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமின்றி பின்னர் பேசிய அவர்,”இந்த போராட்டத்தை மக்கள்,இளைஞர்கள்,பெண்கள் நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.எனவே நான் இங்கு அரசியல் பேச வரவில்லை.அறப்போராட்டத்தை எப்படி கட்டுப்பாடாக நடத்த வேண்டும் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு.அதனையடுத்து நெடுவாசல் போராட்டமும் ஒரு சான்று.

இந்த போராட்டத்தை பார்க்கும் போது,தமி்ழனாக பிறந்ததற்கு பெருமையாக இருக்கிறது.நான் திமுக சார்பிலோ,தமிழக எதிர் கட்சித் தலைவர் என்ற பொறுப்பினாலோ,இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை.கருணாநிதியின் பிரதிநிதி என்ற பெயரில் தான் இங்கு வந்துள்ளேன்.

தி.மு.க. ஆச்சியில் இருந்தபோது ,சுமார் 7000 கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தவர் கருணாநிதி.அந்த உரிமையோடு,இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என இங்கு வந்துள்ளேன்.கடந்த வாரம் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்க சென்ற போது,பெட்ரோலிய அமைச்சரை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை குறித்து பேச முயற்சித்தோம்.ஆனால் அவர் ஊரில் இல்லை.எனவே என்னுடைய கோரிக்கையை ஒரு கடிதமாக தந்தேன்.மேலும் திமுக எம்.பிகள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோர் சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளர்கள்.

இது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கான போராட்டம்.எனவே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என பேசினார்.

Leave a Response