பிரபல இயக்குனர் மற்றும் படக்குழுவினர் மீது தாக்குதல்…..விசாரணை நடத்த மத்திய அமைச்சர் உத்தரவு…

Sanjay Leela Bhansali Attacked
ஹிந்தி திரையுலகில் சற்று பிரபலமானவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். தற்போது “பத்மாவதி” என்று பெயரிடப்பட்ட ஒரு ஹிந்தி திரைப்படத்தை தானே தயாரித்து இயக்கி வருகிறார். அத்திரைப்படத்திற்காக ‘ஜெய்கர் கோட்டையின்’ மாதிரி வடிவமைப்பில் செட் போடப்பட்டு, ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்குள் ராஜ்புட் சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் திடீரென நுழைந்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் படக்குழுவினரை சரமாரியாக தாக்கிவிட்டு, அந்த கோட்டை செட்டையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள், “பத்மாவதி” திரைப்படத்தில் வரும் ஒரு காதல் காட்சியில், ராணி பத்மாவதியுடன் அலாவுதீன் கில்ஜி மிக நெருக்கமாக இருப்பதை போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அந்த காட்சி உண்மைகளை திரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதை பற்றி விவரித்த சஞ்சய் லீலா பன்சாலி, தன்னுடைய “பத்மாவதி” திரைப்படத்தில் அத்தகைய காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை, எடுக்கப்படவுமில்லை என தெரிவித்தார். இந்த கும்பல் வந்து படப்பிடிப்பு தளத்தில் வன்முறையில் ஈடுபட்டது தனக்கு ஒரு அதிர்ச்சியையும், ஒட்டு மொத்த குழுவினருக்கும் ஒரு பயத்தை உண்டாக்கியுள்ளதாக வருத்தப்பட்டார். ரன்வீர் சிங் அலாவுதீன் கல்ஜியாகவும், தீபிகா படுக்கோன் ராணி பத்மாவதி கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்ட செய்தி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்ட விஷயம் அறிந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். சட்டத்தை யாரும் தங்களுடைய கையிற்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது உணவு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்மந்தமாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே’விடம் தான் பேசியுள்ளதாகவும், சஞ்சய் லீலா பன்சாலி மீதும், படக்குழுவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் உத்திரவிட்டுள்ளதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

Leave a Response