ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது – சரத்குமார்…

சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம், ‘ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர்’ என்று அவர் சொன்னதாக நேற்று சில இணையதளங்களில் செய்தியாக வந்தது. அந்த செய்தியின் காரணமாக கொதிப்படைங்க ரஜினி ரசிகர்கள், சமுகவலைதங்களில் சரத்குமாரை இழிவாக பேசியும், திட்டியும் பதிவுகளை செய்துள்ளனர். அது மட்டுமின்றி தமிழகத்தில் சில இடங்களில் சரத்குமாரின் உருவபொம்மை எரிக்கப்பட்டன.

இது சம்மந்தமாக சரத்குமார் தன்னுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார். அதில் தான் “ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.”.

சரத்குமாரின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ள விளக்கம் கிழே:

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை , மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.
அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைதான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன்.
பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிக்கை சகோதரர்கள் ” ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்”
அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.
எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தழிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sarathkumar Self Explanation on FB

Leave a Response