பீடி கம்பெனி வாரிசை கத்தியால் குத்திய பீடி கம்பெனி முதலாளி! குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை!!

Sharik Jamaal Injured 1
வேலுரை சேர்ந்தவர் அப்துல் மாலிக், இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்த அப்துல் மாலிக்குக்கு நான்கு சகோதர்களும் முன்று சகோதரிகளும் ஆவர். இவர்களின் தந்தை காலம் சென்ற அப்துல் ஜபார் உருவாக்கிய நிறுவனம் “14 நம்பர் பீடி”. அப்துல் மாலிக் அவர்களுக்கும் அப்துல் மாலிக்கின் தம்பி பசுலூர் ரஹ்மான் அவர்களுக்கும் சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்து கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அப்துல் மாலிக் அவர்கள் வேலூர் தொரப்பாடியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய தம்பி பசுலூர் ரஹ்மான் வேலூர் ராமநாயக்கன் பாளையத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த மாதம் 12ம் தேதி இரவு சுமார் 09:10 மணியளவில் அப்துல் மாலிக்கின் மகன் ஷாரிக் ஜமால் தன்னுடைய வீடு அருகில் உள்ள கடைக்கு சென்று கொசுவத்தி வாங்கிவரும் போது, அவருடைய சித்தப்பாவும் அப்துல் மாலிக்கின் தம்பியுமான பசுலூர் ரஹ்மான் அவருடைய இரு மகன்கள் அமீன் மற்றும் சமீர் ஆகியோரும் மற்றும் அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் என எட்டு பேர் கொண்ட கும்பல் ஷாரிக் ஜமாலை கொடூரமாக தாக்கியுள்ளனர். ஷாரிக் ஜமால் தான் தாக்கப்படும் வேளையில் குரல் எழுப்பும் வேளையில் அவருடைய குடும்பத்தினர் வெளியே வந்து பார்கையில் ஷாரிக் ஜமால் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த ஷாரிக் ஜமால் அவருடைய குடும்பத்தாரால் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி செயப்பாட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்த கொலைவெறி தாக்குதல் காரணமாக ஷாரிக் ஜமாலின் தந்தை அப்துல் மாலிக் வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்துல் மாலிக் தன்னுடைய புகாரில் குற்றவாளிகளாக 1. பசுலூர் ரஹ்மான், 2. அமீன், 3, சமீர் மற்றும் பெயர் தெரியாத ஐந்து நபர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்மந்தமாக ஷாரிக் ஜமாலின் தந்தை அப்துல் மாலிக் அவர்களை தொடர்புகொண்டு பேசியப்போது அவர் கூறுகையில், இதே மாதம் 2ம் தேதி அன்று ஷாரிக் ஜமால் வேலூர் தொரப்பாடி சிறைசாலை வழியாக வரும் போது பசுலூர் ரஹ்மான், அமீன் மற்றும் சமீர் ஆகியோர் அவர்களுடன் இருந்த அடையாளம் தெரியாத சில நபர்களிடம் இருந்த கும்பலிடம் ஷாரிக் ஜமாலை அடையாளம் காட்டி ஏதோ சொன்னதாக அவருடைய மகன் ஷாரிக் ஜமால் தன் தந்தையிடம் தெரிவித்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை பற்றி ஷாரிக் ஜமாலும் அவருடைய தந்தை அப்துல் மாலிக்கும் காவல்துறையினரிடம் முன்பே தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி பசுலூர் ரஹ்மான் மற்றும் அவருடைய மகன்கள் அவருடைய பீடி தொழிற்சாலையில் ஒருமுறை கஞ்சா பொட்டலத்தை வைத்துவிட்டு காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அப்துல் மாலிக்கை சிக்கவைக்க திட்டமிட்டு, அன்று ஷாரிக் ஜமாலை பொய்யான கஞ்சா வழக்கில் வேண்டுமென்ற சிக்கவைத்தார்கள் அந்த பசுலூர் ரஹ்மான் மற்றும் அவருடைய மகன்கள் என்று தெரிவித்தார். இது மட்டுமின்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அப்துல் மாலிக்கின் பீடி தொழிற்சாலையின் ஜன்னல் கதவுகளை உடைத்து அங்கு கஞ்சாவை போட்டுவிட்டு இவர்களை சிக்கவைக்க முயற்சி செய்ததாகவும் அது சம்மந்தமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பசுலூர் ரஹ்மான் ஒரு கட்டத்தில் இவர்களுடைய தாயின் சொத்தை பொய்யான உயிலை வைத்து தன்னுடைய மகன் பெயரில் அபகரித்துகொண்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக காவல்துறையில் அப்துல் மாலிக் புகார் தெரிவித்துள்ளதாகவும், காவல்துறையினர் அந்த புகாரை ஏற்க மறுத்துவிட்டு நீதித்துறையில் வழக்கு தொடரும்படி சொன்னதாகவும் தெரிவித்தார். இந்த விஷயம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் சொத்து அபகரிப்பு வழக்கு தொடந்துள்ளதாக தெரிவித்தார் அப்துல் மாலிக்.

மேலும் அவர் பேசும்போது கூறியதாவது, பசுலூர் ரஹ்மான் மற்றும் அவர்களுடைய மகன்களுக்கு காவல்துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாக தெரிவித்தார். பசுலூர் ரஹ்மான் மற்றும் அவர்களுடைய மகன்களுக்கு காவல்துறையில் அதிக செல்வாக்கு உள்ளதால் காவல்துறையினர் இன்று வரை பசுலூர் ரஹ்மான், அவர்களுடைய மகன்கள் மற்றும் உள்ள ஐந்து குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என தெரிவித்தார்.

காவல்துறை மீது அப்துல் மாலிக் சொல்லும் குற்றசாட்டு உண்மையில்லை எனில் காவல்துறை உடனடியாக ஷாரிக் ஜமால் மீது கொலைவெறி தாகுதல் நடத்தியவர்களை இனியும் தாமதமின்றி உடனடியாக கைது செய்யவேண்டும்.

காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்கிறார்களா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து பாப்போம்.
Sharik Jamaal

Sharik Jamaal Injured 2

Sharik Jamaal Injured 3

Basulur Rahman

Ameen

Sameer

9df823fa-29c8-4281-9bcf-50332a4452a7

069597c7-fbe4-4393-9460-762a2616aeec

e60a13d1-0f06-4e14-9cad-3debfe01dc9f

Leave a Response