துப்பாக்கியைக் காட்டி சோதனை நடத்தினார்கள்: ராம மோகன் ராவ்

ramamohan_press3துப்பாக்கியை காட்டி வருமான வரித்துறையினர் என் வீட்டில் சோதனை நடத்தினார்கள் என ராம மோகன ராவ் கூறியுள்ளார்.

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ், நான் என்ன தவறு செய்தேன். அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள். நான் என்ன தீவிரவாதியா?

என்னுடைய மருமகள் பேறுகாலத்துக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சூழ்நிலையில், என் வீட்டிலும், மகன் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

32 ஆண்டுகாலம் அனுபவம் உள்ள ஒரு அதிகாரியை இப்படித்தான் நடத்துவதா? என் மீதான புகாருக்கு ஆதாரமுள்ளதா?

முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளேன். புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா தான் என்னுடைய தலைவி. தமிழகம் முழுவதும் நான் பொது மக்களை நேரில் சந்திப்பேன்.  இந்த அரசில் எந்த அதிகாரிக்கும் மரியாதை இல்லை என்று கூறினார்.

Leave a Response