தனுஷ் படத்தில் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர்


40054947கடந்த 2014ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அமலா பால், பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு மலையாள இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை இயக்கியுள்ளார்.


 

Leave a Response