ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்


_6c34f78a-c52a-11e6-88a7-6a72017c5d0fஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.

ஜூனியர் உலகக் கோப்கை ஹாக்கி தொடர் உத்தர பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்த பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா சார்பில் குர்ஜந்த் சிங் (8வது நிமிடம்), சிம்ரன்ஜீத் சிங் (22வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதற்கு முன் இந்திய அணி 2001ல் கோப்பை வென்றது.


 

Leave a Response