பெங்களூருவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்


phpthumb_generated_thumbnailபெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.

ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் நடைபெற்றது.

இந்தவிழாவில் பேசிய அவர், ” சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவ்வப்போது மாட்டிக்கொள்ளும் இதனால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டும் . இந்த நிலையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையானது போக்குவரத்து மிகுந்த நகரத்தில் வசிப்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் முக்கியமானதாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்காக 3 ஹெலிகாப்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரே என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களில் ஐ.சி.யு. வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் இதற்கு என்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒலியும் மற்ற ஹெலிகாப்டர்களை விட குறைவாக இருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறினர்.


 

Leave a Response