திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால் ஒப்பந்தம்


amalaசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவா, சோனியா அகர்வால், அப்பாஸ் மற்றும் மாளவிகா நடித்த ‘திருட்டுப் பயலே’ கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி கொடுத்தது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சுசி கணேசன் அறிவித்திருந்தார்.

முதல் பாகத்தில் ஜீவா நடித்திருந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், அப்பாஸ் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார். முதல்பாகத்தில் மாளவிகாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாளவிகா கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமலாபால் தற்போது ‘வடசென்னை’ என்ற ஒரு படத்திற்கு மட்டுமே ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், வருகிற வாய்ப்பை தவிற்க்க வேண்டாம் என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.


 

Leave a Response