ஜெயம் ரவியுடன் விண்வெளிக்கு பறக்கும் நிவேதா!

nivetha-pethuraj-stills-photos-pictures-24

கடந்த 2015-ல் ‘ஜெயம்’ ரவி நடித்து ரிலீஸான ‘ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம்’ என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இவ்வருடம் வெளியான ‘மிருதன்’, தமிழில் வெளியான முதல் ‘ஸோம்பி’ திரைப்படம் என்ற அடையாளத்தை பதித்ததால் இயக்குநர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்தன.

இப்படம் ரசிகர்களிடையேவும், பத்திரிகையாளர்களிடமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. நாணயத்தில் ‘பேங்க் ராபரி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ‘நாய்’, மிருதனில் ‘ஸோம்பி’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான லைன் புடிப்பது டைரக்டர் சக்திக்கு கை வந்த கலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் ‘ஜெயம்’ ரவியுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன். அதுமட்டுமின்றி இப்படத்தின் கதைக்களம் விண்வெளி சம்பந்தப்பட்டதாம். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே அதிக பரிச்சயம் இல்லாத இதன் லைன் இப்போதே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டுபோகச் செய்துள்ளது.
இப்படத்தை ‘மீகாமன்’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் தயாரிக்கவுள்ளாராம். இதற்கு ‘டிக் டிக் டிக்’ என 1981-ல் கமல் – பாரதிராஜா கூட்டணியில் வெளியான பட தலைப்பை கைப்பற்றி வைத்துள்ளனர். இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘ஒரு நாள் கூத்து’ நிவேதா நடிக்க கமிட்டாகியுள்ளார். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response