குற்றமே தண்டனை – விமர்சனம்

maxresdefault

காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படைப்புதான் குற்றமே தண்டனை திரைப்படம்.. தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்ல ஒரு சிலரே போராடி வருகின்றனர். இந்த லிஸ்டில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இடம்பிடித்தவர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் இளையராஜா இசையில், விதார்த், பூஜா நடித்துள்ள படம் குற்றமே தண்டனை.

இந்த படத்தின் கதையை பொருத்தவரை க்ரெடிட் கார்ட் கடன்களை வசூலிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விதார்த் நேராக மட்டுமே பார்க்க முடிகிற ‘டன்னல் விஷன்’ குறைபாடு உள்ளவர். அதே நிறுவனத்தில் பணிபுரிபவர் பூஜா. இவர் விதார்த்தை காதலிக்கிறார். தன்னுடைய டன்னல் விஷன் குறைபாடை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படும் போது ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலை பல பேரின் வாழ்வில் தொடர்புடையதாக மாறுகிறது, அந்த கொலை எதற்காக நடந்தது, ஏன் நடந்தது, யார் செய்தார்கள், அந்த கொலையால் இவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகின்றது என்பதை மிகவும் யதார்த்தமாகவும், த்ரில்லாகவும் கூறியிருக்கிறார் இயக்குனர். இந்த கொலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் விதார்த் அதில் சில விளைவுகளையும் சந்திக்கிறார். அந்த கொலையை யார் எதற்காக செய்தார்? விதார்த் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தனது குறைபாட்டை நீக்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

மணிகண்டன் எப்போதும் தரமான படத்தை தான் இயக்குவேன் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் போல, வெற்றிக்காக போராடி வரும் விதார்த்தை இந்த படத்தில் தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்டலாம். அவரும் உடம்பில் ஒரு குறையுடன் பயணிக்கும் காட்சிகள் மிகவும் யதார்த்தம், படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் யதார்த்தமாக வந்து செல்கின்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதபாத்திரம் சிறியது என்றாலும் மனதில் பதியும் படி நடித்து செல்கிறார், நாசர், ரகுமா, பூஜா என அனைவரும் கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர். மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய் ப்ளஸ், அவரே இயக்கம் ஒளிப்பதிவு என்பதால் தனக்கு என்ன மாதிரியான காட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அழகாக காட்டியுள்ளார்.

பாடல்களே இல்லாமல் இந்த படத்தை கதைக்கேற்ற உணர்வுபூர்வமாக இயக்கியுள்ளார் மணிகண்டன். கொஞ்சமாக வந்தாலும், குறையில்லாமல் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நாசர், விதார்த் இடையே உள்ள உறையாடல்கள் நறுக்கென்று உள்ளன. கொலை தொடர்பாண விசாரணையில் பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது படத்தின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

படத்தின் மிகப்பெரிய பில்ப் என்னவென்றால் மெதுவாக செல்லும் திரைக்கதையைத்தான் சொல்ல வேண்டும்.

மொத்ததில் இதைப் போன்ற கதை தமிழ்சினிமாவில் வரவேண்டும் வரவழைப்போம்.

Leave a Response