பூலோகம் திரைவிமர்சனம் – மீண்டும் சாட்டையை கையில் எடுத்த ஜெயம் ரவி..!

booloham ottran

பூலோகம் திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு மிகமிக தாமதமாக வெளிவந்த படம். சுருக்கமாக சொல்லப்போனால், தனிஒருவன் படத்திற்கு முன்பே வெளிவரவேண்டிய படம். இவ்வளவு தாமதமாக வெளிவந்ததும் ஒருவகையில் நன்மையே. அன்று இந்தப்படம் வெளிவந்தால் ரசிகர்கள் இந்த படத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்பதைவிட தற்பொழுது இந்த படத்தை 100% ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். இந்த படத்திலும் சில சிந்தனைக்குரிய சில சமூக விஷயங்களும் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பரப்பிய விஷயம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் விட்டு சென்ற இன்னொரு விளையாட்டு பாக்சிங். அதுவும் சென்னையில் இதை உயிர்மூச்சாக நினைக்கும் ஒரு படையே உள்ளது என்பது, இப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவும். பொதுவாக சென்னையை மையமாக வைத்து வரும் படங்கள் அனைத்துமே அரசியல் பின்னணி, ரவுடிசம், கூலிப்படை இப்படிப்பட்ட படங்கள் தான் நிறைய வெளிவந்துள்ளன. அந்தவகையில் சென்னைக்கு குறிப்பாக வடசென்னை இன்னொரு அடையாளம் உள்ளது என்பதை இப்படம் மூலம் அனைவரும் அறிந்துகொள்ளலாம்.

இரண்டு பரம்பரைக்கு இடையே பாக்ஸிங் துவங்கிய காலத்தில் இருந்து புகைந்துகொண்டிருக்கும் பங்காளிச்சண்டையை வைத்து ஆதாயம் தேட நினைக்கும் ஒரு குறுக்கு புத்தியுடைய தொலைக்காட்சி உரிமையாளரை தோலுரித்துக்காட்டியுள்ளது இப்படம். ஜெயம் ரவி பாக்ஸராக ஏற்கனவே நடித்த அனுபவம் உள்ளதால் இந்தப்படத்திலும் பக்காவாக பொருந்தியுள்ளார். பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் என்பது அடி மட்டத்தில் உள்ள மக்களுக்கு கவர்ச்சி விளம்பரம் காட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பதை மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர். இயக்குனர் ஜனநாதனின் வசனங்கள் படத்திற்கு உயிர் கொடுக்கும் ரத்த ஓட்டம். அவருடைய வசனங்கள் நிறைய இடங்களில் நம்மை கவர்கின்றது.

மொத்தத்தில் இப்படத்தின் மூலம் மீண்டும் சமூகத்தை சுத்தம் செய்ய, சாட்டையை கையில் எடுத்துள்ளார் ஜெயம் ரவி.

Satheesh Srini

Leave a Response