கோடியில் சம்பளம் – தயாரிப்பாளர்களை தெறிக்கவிடும் ஹிப்ஹாப் தமிழா

vijayakanth-aadhi

இசையமைப்பளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர். அம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த ‘தனி ஒருவன்’ படம், இந்த வருடம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அரண்மனை 2, கதகளி ஆகிய படங்களிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தான் விஜயகாந்த் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ படத்தில் இசையமைக்க ஒப்பந்தமானார்.

‘தமிழன் என்று சொல்’ படத்தின் பூஜையில் கலந்துகொண்ட பேசிய ஆதி, தமிழன் என்ற வார்த்தைக்காக தான் இசையமைப்பதற்காக ஒப்புக்கொண்டேன் எனத்தெரிவித்தார். ஆனால், ஆதி கூறியது முற்றிலும் பொய் என தகவல்கள் கிடைத்துள்ளது. இது விஜயகாந்த் படம் என்பதால் ஆதி முதலில் இசையமைக்க மாட்டேன் என மறுத்துவிட்டார். பெரிய இசையமைப்பாளர்கள் வேறு யாரும் ஒத்துவராததால் மீண்டும் ஆதியையே அணுகியுள்ளனர் விஜயகாந்த் தரப்பு. 40 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆதியின் சம்பளத்தை 60 லட்சம், 80 லட்சம் என உயர்த்தி தருவதாக கூறியுள்ளனர். அப்பொழுதும் சிறிது தயங்கிய ஆதியிடம் சுலையாக 1 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியவுடன் படத்தில் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் மேடையில் கூறியதோ வேறு.

இதன்பிறகு, ஆதிக்கு தலைகால் புரியவில்லை போல, தன்னுடைய படத்தில் இசையமைக்க வேண்டும் என தேடிவரும் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு தெறிக்கவிடுகின்றாராம். பொதுவாக படங்கள் வெற்றி பெற்றால், மார்கெட் இருப்பவர்கள் தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஆதியின் சம்பளம் உயர்ந்த கதை வேறு. விஜயகாந்த் படத்தில் இசையமைப்பாளர்கள் யாரும் கிடைக்காத காரணத்தினால், வேறு வழியில்லாமல் மிகப்பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளரே தவிர அவருக்கு இருக்கும் மார்க்கெட்டால் உயர்த்த சம்பளம் கிடையாது.

‘ஒய் திஸ் கொலை வெறி’ என்ற முதல் பாடலிலேயே உலக அளவில் பாப்புலரானவர் அனிருத். அப்படி இருந்தும், தன்னுடைய சம்பளத்தை படிப்படியாக தான் உயர்த்திக்கொண்டார், அவருக்கு கோடிகளில் சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர்களும் தயாராக இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் டி.இமான் 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் உள்ளார். மைனா, கும்கி, சாட்டை படங்கள் வெற்றிக்கு பிறகு கூட லட்சங்களில் தான் சம்பளம் வாங்கினார். விஜய்யின் ஜில்லாவிற்கு பிறகு தான் கோடியை தொட்டார். அதன்பிறகும் கூட, படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சம்பளத்தை குறைக்கவும் செய்கின்றார்.

ஆனால், ஆதி அந்தப்படத்தில் இவ்வளவு வாங்கிவிட்டேன், அதற்கு குறையாமல் சம்பளம் வேண்டும் என பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் போலவே காமெடி செய்துவருகின்றாராம். சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட நடிகர், நடிகைகள், சினிமாக்கலைஞர்கள் எத்தைனையோ பேர், இருந்த சுவடே தெரியாமல் போயுள்ளனர். இதையெல்லாம் அறிந்து பொறுப்புடன் செயல்படுவது ஆதிக்கு தான் நல்லது.

இதை அவர் உணர்ந்துகொள்ளவாரா? எனப்பார்க்கலாம்.

Satheesh Srini

Leave a Response