‘வலியவன்’ எங்கே போனார்?

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலமாக வழக்கமான சினிமாவாக இல்லாமல் இவர் வேற மாதிரி படங்களைத்தான் இயக்குவார் என நிரூபித்தவர் இயக்குனர் சரவணன். தற்போது தமிழில் தனது மூன்றாவது படமாக ஜெய், ஆண்ட்ரியா இருவரையும் வைத்து ‘வலியவன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. அதன்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கதாநாயகன் ஜெய் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருவரும் மிஸ்ஸிங். இதில் இமானுக்கு கம்யூனிகேஷன் பிராப்ளம் காரணமாக முன்கூட்டியே தேதியை தெரிவிக்காததால், ஏற்கனவே முடிவு செய்த அவரது வேலைக்காக இன்று அவர் வெளிநாட்டு சென்றுவிட்டாராம்.

சரி.. ஜெய் வந்திருக்கணுமே..? ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கதாநாயகி வராமல் போவது வழக்கமானது தான்.. ஆனால் கதாநாயகன் கட்டாயம் இருப்பார். (அஜித் தவிர). ஆனால் இந்த நிகழ்வில் ஆண்ட்ரியா சின்சியராக வருகை தந்திருக்க, ஜெய் மட்டும் வரவில்லை. இது குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “ஒருவேளை வராமல் இருந்தால் தான் அது மிகப்பெரிய பப்ளிசிட்டியாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம்’ என்றவர் கடைசி வரை உண்மையான காரணத்தை கூறாமல் மழுப்பி விட்டார்.