“தமிழ்ல டைட்டில் கிடைக்கலீங்க” – ஞானவேல்ராஜா ஆதங்கம்..!

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள முதல் படமாக பொங்கலன்று வெளிவர இருக்கிறது ‘டார்லிங்’. தெலுங்கில் ஹிட்டான ‘பிரேமகதா சித்திரம்’ படத்தைத்தான் தமிழில் ‘டார்லிங்’காக ரீமேக் பண்ணியிருக்கிறார்கள். பேய்ப்படமாக உருவாகி இருக்கும் இதில் ஜி.விக்கு ஜோடியாக நடிப்பவர் சிருஷ்டி.. ஆவியாக நடிப்பவர் நிக்கி கல்ராணி. கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.

தமிழ்ப்படத்திற்கு எப்படி டார்லிங் என ஆங்கிலத்தில் பெயர் வைத்தீர்கள் என இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “எப்படியும் U/A’ சான்றிதழ் தான் தரப்போகிறார்கள் என்பதால் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்துவிட்டோம்” என்றார்.

பின் சுதாரித்துக்கொண்டவர், “தமிழில் சரியான பெயர் கிடைக்கவில்லை.. ஏதாவது ஒன்று பொருந்துவதாக இருந்தால், அதனை இன்னொருவர் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த டைட்டில் விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தால் நல்லது” என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.