“சின்ன படங்களை ஒதுக்காதீர்கள்” – இயக்குனர் பேரரசு..!

‘பெருமாள் கோவில் உண்டச்சோறு’ வாங்கித்தின்னாதவர்கள் இருக்க முடியாது.. அப்படி வாங்கி சாப்பிட்டு மயங்கியதாலோ என்னவோ தனது படத்திற்கு அதையே பெயராக வைத்திருக்கிறார் இயக்குனர் வி.டி.ராஜா. இந்தப்படத்திற்கு ஆர்.ஆர்.கார்த்திக் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் மற்றும் பாலம்’ கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். விழாவில் பேரரசு திரையுலக பிரபங்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளாததை கண்டு வருத்தப்பட்டார்.

“தயவுசெய்து சிறிய படங்களின் விழாக்களுக்கு திரையுலக பிரபலங்கள் வருகை தனது ஆதரவு தரவேண்டும்.. சின்னவர்களை இன்று நீங்கள் ஒதுக்கினால், நாளை ஆண்டவன் உங்களை சின்னவர்களாக்கி வேடிக்கை பார்ப்பான்” என சற்று கோபம் தொனிக்க பேசினார்.