நாய்கள் ஜாக்கிரதை சக்சஸ் ஆகும்.. ஏன்..?

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஹீரோ சிபிராஜுக்கு இணையான கேரக்டரில் பயிற்சி பெற்ற ராணுவ நாய் ஒன்று நடித்திருக்கிறது. படம் முழுவதும் வரும் இந்த நாய் கேரக்டர் ஒவ்வொரு வீட்டில் உள்ள சின்னக்குழந்தைகளையும் தங்கள் பெற்றோரையும் சேர்த்து தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும்..

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மயில்சாமி, “இந்தப்படத்தின் வெற்றிக்கும் விளம்பரத்துக்கும் காரணமாக இருக்கப்போவது இந்த டைட்டில் தான். காரணம் இன்று ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்கிற போர்டு தொங்காத வீடு ஒன்றுகூட இல்லை.. அதனாலேயே இந்தப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும்” என்றார்.

படத்தில் நடித்த கதாநாயகி அருந்ததி பேசும்போது “படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் நாய்க்கு கூட ரெண்டு பாட்டு இருக்கு.. ஆனால் எனக்கு ஒண்ணுகூட இல்லை” என்று புலம்பும் அளவுக்கு கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

படத்தின் தயாரிப்பாளரான சத்யராஜ் படத்தை வாங்கிய விநியோகஸ்தரான காஸ்மோ வில்லேஜ் நிறுவனத்திடம், “எப்படியாவது ஒரு நூறு தியேட்டர்களிலாவது ரிலீஸ் பண்ணிவிடுங்கள்” என்று கோரிக்கை வைக்க, அவர்களோ, இந்தப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து 25௦ தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்.

ஆக இத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப்படமாக அமைவதற்கு.