அக்டோபரில் விடுமுறை விட்டார் தமன்னா..!

தொடர்ந்து இந்தி, தெலுங்கு என மாறி மாறி ஓய்வில்லாமல் நடித்து வந்த தமன்னா இந்த அக்டோபர் மாதம் முழுவதும் படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்துவிட்டார். காரணம் தனது குடும்பத்தினருக்கும் தனது நட்பு வட்டாரத்திற்கும் போதிய நேரம் ஒதுக்க முடியாமல் போனதால் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக கழிக்கவே இந்த விடுமுறையாம்.

இந்த விடுமுறை முடிந்து மீண்டும் நவம்பரில் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைகிறார் தமன்னா. அதில் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்கும் ‘பாஹூபலி’யும் ஒன்று. தொடர்ந்து அடுத்த சம்மர் வரை தமன்னாவின் கால்ஷீட் டைரி புல்லாகவே இருக்கிறதாம்.