அஞ்சான் – விமர்சனம்

கதை : சூர்யா, வித்யுத் ஜாம்வால் இருவரும் மும்பை டான் நண்பர்கள். ஆனால் தங்களை எச்சரித்த இன்னொரு டானை கடத்திவந்து உயிர்பிச்சை கொடுத்து அனுப்பி அவமானப்படுத்துகிறார்கள்.. அவன் சூர்யா இல்லாத நேரம் வித்யுத்தை கொல்கிறான். சூர்யா வந்தவுடன் அவரையும் சுட்டு ஆற்றில் தள்ளுகிறான். ஆனால் இன்னொரு சூர்யா காலை நொண்டியபடி மும்பைக்கு வருகிறார் தனது அண்ணனை பார்க்க.. நடந்த விஷயங்களை அறிகிறார்.. இனி நடப்பது என்ன..? இதுதான் கதை..

அஞ்சான் படத்தை பார்க்க பத்து காரணங்கள்..
1.சூர்யாவின் டபுள் ஆக்ஷனில் இயக்குனர் லிங்குசாமி வைத்திருக்கும் ட்விஸ்ட்…
2.இரண்டு கேரக்டர்களையும் வித்தியாசமாக பேலன்ஸ் செய்திருக்கும் சூர்யாவின் அழகான, ஆக்ரோஷமான நடிப்பு….
3.சூர்யாவுடனான நட்பு காட்சிகளில் மிளிரும் வித்யுத் ஜாம்வாலின் மிக அற்புதமான, அலட்டல் இல்லாத நடிப்பு..(ஹீரோ சான்ஸுக்கு ரெடியா இருங்க சார்)
4.ஒருசில காட்சிகளில் மட்டும் சமந்தா…
5.அளவான டோஸுடன் அமைக்கப்பட்டிருக்கும் சூரியின் காமெடி..
6.மும்பை மாநகரமும் அதை பரபரப்பாக காட்டியுள்ள சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும்
7.யுவனின் பின்னணி இசை.
8.———
9.———
10———

படத்திற்கான வேகத்தடைகள்….
1.இடைவேளைக்கு பின்பு கூட அடிக்கடி பிளாஸ்பேக்கில் சொல்லப்படும் காட்சிகள்.. போதாதற்கு அடிக்கடி வரும் பாடல்கள்.
2.தேவையில்லாத கவர்ச்சி காட்டும் சமந்தா
3.படத்தின் நீளம் (2 மணி 50 நிமிடம்)
4.மும்பை களம் மற்றும் ரவுடி குரூப்பின் வழக்கமான துரோக காட்சிகள்
5.ப்ளீஸ்.. இவ்வளவு போதுமே…