‘மேகா’ படத்தில் இடம்பெற்ற பாரதிராஜா பாடல்..

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் கதாநாயகனாக நடித்த அஸ்வினும் அறிமுக நாயகி சிருஷ்டியும் நடித்து வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள படம்தான் ‘மேகா’. கார்த்திக் ரிஷி இயக்கியுள்ள இந்தப்படத்தை வரும் 22ஆம் தேதி ஜே.எஸ்.கே சதீஷ் வெளியிடுகிறார்.. இந்தப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமே இளையராஜா இசையமைத்திருப்பதுதான்.
1981ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற ‘புத்தும்புது காலை’ என்ற பாடல் மட்டும் ஆடியோ கேசட்டில் இருந்தாலும் படத்தில் இடம்பெறவில்லை. அந்தப்பாடலை பலமுறை கேட்டு ரசித்த ரசிகர்களுக்கு கூட இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இப்போது அந்தப்பாடலுக்கு 33 வருடம் கழித்து மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ஆம்.. ‘மேகா’ படத்தில் இந்தபாடலை காட்சிப்படுத்தி படமாக்கி இருக்கிறார்கள். கதாநாயகன் அஸ்வினும் நாயகி சிருஷ்டியும் திருமண வீட்டில் சந்திக்கும்போது அவர்களுக்குள் காதல் உருவாவதாக இந்தப்பாடலின் பின்னணி அமைந்துள்ளது.