‘லிங்கா’வில் இருந்து சற்றே ரிலாக்ஸானார் சோனாக்‌ஷி..!

பாலிவுட்டின் பிரபல நாயகி சோனாக்‌ஷி சின்ஹா தனது அறிமுகப்படமான ‘தபாங்’கிலேயே ஓஹோவென உயரத்துக்கு போய்விட்டார். அடுத்து அக்ஷய் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ‘ரௌடி ரத்தோர்’ படமும் சூப்பர் ஹிட்டாக, அன்று பிஸியானவர்… இன்றுவரை பிஸியோ பிஸிதான்..

பாலிவுட்டில் நடைத்தபோது கிடைத்த புகழைவிட இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடித்துவரும் ‘லிங்கா’ அவருக்கு இன்னும் பலமடங்கு பிரபலத்தை தேடித்தந்துள்ளது. தற்போது ஹைதராபாத்தில் நடந்துவரும் படப்பிடிப்பில் தனது முதல்கட்ட பகுதியை நடித்து முடித்திருக்கிறார் கதாநாயகி சோனாக்ஷி சின்ஹா.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் “ஹைதராபாத்தில் நான் நடித்துவரும் லிங்கா’ படத்தின் முதல்கட்ட படப்படிப்பை முடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘லிங்கா’ படப்பிடிப்பில் இருந்தபோது வீட்டில் இருந்த மாதிரியான உணர்வே இருந்தது” என குறிப்பிட்டுள்ள சோனாக்ஷி சின்ஹா லிங்கா’ மூலம் தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளார் .

இந்தப்படத்தில் அவருக்கு 1940களில் வாழும் பெண்ணின் கதாபாத்திரம் என்பதால் அதற்காகவே பிரத்யேகமான உடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளனவாம். ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா இன்னொரு கதாநாயகியாக நடிக்க, முக்கியமான வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார்.