காசு.. பணம். துட்டு.. ஆசை காட்டுகிறார் சி.வி.குமார்..!

இதனால் ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘பீட்சா-2 தி வில்லா’ படத்தை தயாரித்த மாதிரி, தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார்.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் துவங்க இருக்கும் இந்தப்படத்திற்காக புதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது இந்த இரண்டாம் பாகத்தின் கதை எப்படி இருக்கலாம் என இந்தப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் யார் வேண்டும்னாலும் தங்களது யோசனையை தெரியப்படுத்தலாம்.

அந்தக்கதை படமாக ஆரம்பிக்கப்படும்போது யாருடைய ஐடியா ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அவர்களுக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை வழங்கி கௌரவிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவருடன் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது.