பிரான்மலை திரை விமர்சனம்

அத்திப்பூத்தாற் போல் தமிழ் சினிமாவை அலங்கரிக்க ஒரு சில படங்கள் வந்து செல்வது பார்த்திருப்போம். அப்படியாக உருவாகி வெளிவந்துள்ள படம்தான் ‘பிரான்மலை’

கதைக்குள் சென்றுவிடலாம்…

பிரான்மலை என்ற ஊரில் வாழ்ந்து வருபவர் வேல ராமமூர்த்தி. ஊருக்குள் பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இவர், தான் இட்டதுதான் சட்டம் என்ற வைராக்கிய குணமும் படைத்தவர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் இவர், வட்டி பணம் கொடுக்காதவர்களை கொடூரமாக நடத்துகிறார்.

இவரது மகன் ஹீரோ வர்மன். அப்பாவை போல் இல்லாமல், ஹீரோவுக்கான குணமோடு, அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார்.

தனது ஊருக்கு சமூக சேவை செய்ய வரும் குழுவில் இருக்கும் ஹீரோயின் நேகாவின் மீது காதல் கொள்கிறார் ஹீரோ. இந்த விவகாரம் ஹீரோவின் அப்பாவிற்கு தெரிய வர, ஹீரோவை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.

அப்பாவின் சொல்படி தனது ஊரை விட்டு கிளம்பும் வர்மன், அவர் சொல்லும் ஊருக்கு செல்லாமல் தனது நண்பர் பிளாக் பாண்டி இருக்கும் கோவைக்கு வர, அங்கே ஹீரோயின் நேகாவை மீண்டும் சந்திக்கிறார். தனது காதலை நேகாவிடம் வெளிப்படுத்த, அவரும் வர்மனை காதலிக்க தொடங்குகிறார்.

அப்பாவிற்கு தெரியாமல் நேகாவை திருமணம் செய்து கொள்கிறார் வர்மன். தனது மனைவியுடன் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் வர்மன், ஒரு கட்டத்தில் நல்ல வேலையில் செட்டில் ஆகிறார்.

அதே சமயம், சொந்தத்தில் பெண் பார்த்து வர்மனுக்கு திருமணம் பேசி முடிக்கும் வேல ராமமூர்த்தியும் அவரது சொந்தங்களும், வர்மனின் காதல் திருமணம் குறித்து அறிந்து கடும் கோபமடைகிறார்கள்.

தனது அப்பாவை சந்திக்க மனைவியுடன் பிரான்மலைக்கு செல்கிறார் ஹீரோ. அங்கு நடக்கும் அதிரடியான திருப்பு முனை காட்சிகளே படத்தின் க்ளைமாக்ஸ்….

புதுமுகங்கள் வர்மன் கதைக்கேற்ற ஒரு கதாபாத்திரம் தான். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வர்மனின் நடிப்பு அனுபவ நடிகர்களின் வெளிச்சத்தை காட்டியிருக்கிறார். நாயகி நேகா பொருத்தமான தேர்வு தான்.

ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காதல் என்று அனைத்துக் காட்சிகளிலும் நடிப்பில் தேர்ந்தவராக இருப்பவர் பக்கத்து வீட்டு பையனைப் போல இயல்பாக இருப்பதோடு, இயல்பாகவும் நடிக்கிறார்.

அதிலும், இறுதிக் காட்சியில் தனது மனைவிக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறுவதும், உறவினர்களிடம் கோபம் கொள்ளும் காட்சியிலும் நடிப்பால் கைதட்டல் பெறுகிறார்.

நாயகி நேகா நடிப்பிலும் அழகிலும் எளிமையாக இருந்து தனது வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வழக்கம்போல் கதாபாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்.

ஆவணக் கொலைகள் பற்றி பல படங்கள், பல கருத்துகள், போராட்டங்கள் வைத்தாலும் இன்னமும் இந்த சமுதாயம் மாறாமல் அப்படியே இருப்பது மன வேதனை உச்சம் தொடுகிறது.

Leave a Response