காலாவதி தேதியுடன் விற்பனையாகும் பழனி பஞ்சாமிருதம் !

palani_panchamrutham

பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

நம் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். காஞ்சிபுரம் இட்லி, மதுரையில் புட்டு, திருப்பதியில் லட்டு என ஒவ்வொரு கோவிலிலும் வழங்கப்படும் பிரசாதங்கள் பிரபலமானவை. அந்தவகையில், பழனி என்றாலே பஞ்சாமிருதம் தான் நினைவுக்கு வரும்.

இதற்கு முன்னதாக, கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து வந்தனர். இருப்பினும் உணவுப்பொருளாக இருப்பதால் தயாரிக்கும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அறநிலைத்துறையின் ஆலோசனையின் படி பழனி முருகன் கோவிலில் தயாரித்து விநியோகிக்கப்படும் பஞ்சாமிருதம் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று டப்பாவில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

தயாரிப்பு தேதியுடன் விற்பனை செய்யும் இந்த முறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Response