பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா! ஷாக் கொடுத்த லக்ஷ்மி தயாரிப்பாளர்..

2018-02-03-PHOTO-00000594

ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. உணர்வுகளும், பிரியாவிடையும் லக்‌ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் மிகவும் மிகுந்த ஈடுபாட்டோடு படத்துக்காக உழைத்தார் என்றா படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி.

தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறும்போது, “இயக்குனர் விஜய் ஒரு கண்னியமான மனிதர், தயாரிப்பாளருக்கு தோள் கொடுக்கும் நண்பர். தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அவரின் யோசனைகள், திட்டமிடல், செயல்படுத்தும் விதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர். வெளியில் கேட்டதை விட, லக்ஷ்மி படத்தின் மூலம் நாங்கள் அனுபவத்திலேயே அவற்றை உணர்ந்திருக்கிறோம்” என்றார்.பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகவும் தேர்ந்த திறமையான நடிகர்களை கொண்டுள்ள, இந்த லக்ஷ்மி படத்துக்கு, சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த இசையமைக்கிறார். திரையில் காட்சிகள் மூலம் மாயாஜாலம் செய்யும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இன்னொரு தயாரிப்பாளராக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவியும் இந்த படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல பொழுதுபோக்கை கொடுப்பார்கள் என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *