“ஜல்லிக்கட்டுக்கு” புதிய விதி..!விலங்குகள் நல வாரியம் தகவல்..

Jallikatu 2

தமிழகத்தில், அறுவடை காலத்தையொட்டி நடத்தப்படும், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்தாண்டு, சென்னை, மெரினா கடற்கரையில், வரலாறு காணாத போராட்டத்தில், இளைஞர்கள் ஈடுபட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதை சட்டபூர்வமாக்கும் வகையில், தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு, நிகோடின், கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் தரப்பட்டு உள்ளதா என, சோதனை நடத்தப்பட வேண்டும்.ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அனைத்து இடங்களிலும், விலங்குகள் நல வாரியத்தின் ஆய்வுக் குழுவினர் சோதனை நடத்துவர்.3 வயது நிரம்பாத காளைகள், 15 வயதை தாண்டிய காளைகள், போட்டியில் பங்கேற்கக் கூடாது.ஜல்லிக்கட்டு நடத்தப்படும் குறிப்பிட்ட ஒரு நாளில், பங்கேற்கும் காளைகள், அவற்றின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கும் போட்டியாளர்கள் ஆகியோருக்கு, ‘இன்சூரன்ஸ்’செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, ‘வீடியோ’ படமாக்கப்பட வேண்டும்.போட்டியாளர்களுக்கு பிரத்யேக ஆடை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.

Leave a Response