ஆருஷி வழக்கு: ராஜேஷ் தல்வார் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!

aarushi-750x506

 

ஆருஷி கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார்,நுபுர்தல்வார் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

2008-ல் ஆருஷி என்ற 14 வயதுசிறுமி, வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜ் ஆகியோர் நொய்டாவில் மர்மமான முறையி்ல் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆருஷி பெற்றோர் ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகியோர் கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ.விசாரணையில் இவர்களுக்கு 2013-ல் தண்டனை விதிக்கப்பட்டது.

aarushi

தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட அப்பீல் வழக்கில் போதிய சாட்சியங்கள் ஆதாரங்கள் இல்லையென கூறி கடந்த அக்டோபரில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து பெற்றோர் விடுதலையாகினர்.

இந்நிலையில் ஹேம்ராஜ் மனைவி கும்ஹாலா பஞ்சாடே சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் எனது கணவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அலகாபாத் ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. இதனை சி.பி.ஐ. கவனத்தி்ல் கொள்ளவில்லை எனவே தல்வார் தம்பதியினர் விடுதலை செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றார். மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது

Leave a Response