மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா் விஜயகாந்த்…!

 vijayakant

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றிருந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் இன்று காலை வீடு திரும்பினாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூர் சென்று மருத்துவ பாிசோதனை செய்து கொள்வது வழக்கம். இருப்பினும் விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார்.

இந்நிலையில், சிகிச்சைப்பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு தொிவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்த விஜயகாந்த் தனது மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினாா்.

Leave a Response