பத்மாவதி பட விவகாரத்தில் மத்திய தணிக்கை சினிமா குழு தனது கடமையை செய்யட்டும்: மவுனம் கலைத்தார் மத்திய மந்திரி

news_2294

தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி பட விவகாரத்தில் மத்திய திரைப்பட தணிக்கை குழு தனது கடமையை செய்யட்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

201711201740045393_MP-bans-release-of-Bhansali-s-Padmavati-movie-Mamata-calls_SECVPF

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்மாவதி பட விவகாரத்தில் மத்திய தணிக்கை குழு தனது கடமையை செய்யட்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

201711201723426898_Padmavati-blocked-After-Madhya-Pradesh-Punjab-also-bans_SECVPF

 

இதுதொடர்பாக, தலைநகர் புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ‘எந்த சில பணிகளுக்காக மத்திய சினிமா தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதோ.., அந்த கடமையை அது செய்யட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
சித்தூர் ராணி பத்மினியும் அலாவுதீன் கில்ஜியும் காதல்வயப்படுவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ‘பத்மாவதி’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் தலை விரித்தாடும் நிலையில் மத்திய அரசின் சார்பில் முதன்முறையாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தற்போது கருத்து தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பத்மாவதி படம் தொடர்பாக மத்திய சினிமா தணிக்கை குழு நடுநிலையுடன் செயல்படும் என அதன் தலைவர் பிரசூன் ஜோஷி குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

Leave a Response