தமிழில் தொடர்ந்து நடிப்பேன்! ஸ்பைடர்’ படம் ரிலீஸான உற்சாகத்தில் மகேஷ் பாபு

spyder

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய படம், ‘ஸ்பைடர்’.  இப்படம் சுமார்   125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம்.

முருகதாஸ், சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  நேரடியாகத் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பதாலும், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

இந்நிலையில், மகேஷ் பாபுவின் பிறந்த நாளான அன்று ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

 

sj

படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.  ராகுல் பரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது – ஸ்பைடர்.’

மகேஷ் பாபு, இந்தப் படத்தில் உளவாளியாக  நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் இக்கதை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெற்றியடையும் என்று தோன்றினால் தொடர்ச்சியாக தமிழில் நடிப்பேன். சில கதைகள் மட்டுமே இருமொழிகளிலும் வெற்றியடையும். தெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார், பிரின்ஸ் என்ற பட்டம் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, பெயரின் மீது அதைப் போட வேண்டாம் என நினைக்கிறேன். உண்மையில் எனக்கு அரசியல் என்ற வார்த்தையை எப்படி எழுத வேண்டும் எனத் தெரியாது.

இவ்வாறு மகேஷ்பாபு பேசினார்.

Leave a Response