என்னங்கோ, ஏனுங்கோ Lyca Anthem..!

13cbryrhi_01--T__C_2971734f
TNPL கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இதற்காக பல அணிகள் தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரவர் கிரிக்கெட் அணிக்கான புரமோஷனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மதுரை, சென்னை, திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி, காரைக்குடி, திருவள்ளுர், காஞ்சிபுரம் என மொத்தம் 8 அணிகள் இந்த லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன.

கோவை கிங்ஸ் அணியை இந்தியாவின் அதிக பட்ஜெட் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் தீம் பாடல் வெளியீட்டு விழா கோயம்பத்தூரில் நடைபெற்றது. இதில் லைக்கா நிறுவன அதிபர் சுபாஷ்கரன், Wise Chairman பிரேம், Lyca COO ராஜு மகாலிங்கம், பாடலை இசையமைத்த பாடகர் கார்த்திக், இயக்குநர் விஜய் என பலர் கலந்து கொண்டார்கள். கோயம்பத்தூர் BrookeField மாலில் இதன் வெளியீட்டு விழா நடந்தது.

இவ்விழாவில் பேசிய சுபாஷ்கரன், லைக்கா என்றால் Connecting People, இதற்கு சிறந்த உதாரணமாக தற்போது கிரிக்கெட்டில் மூலம் நாங்கள் மக்களை தற்போது இணைத்துள்ளோம் என்று கூறினார்.

லைக்கா COO ராஜு மகாலிங்கம் பேசுகையில், TNPL அறிவிப்பு வந்ததும் நாங்கள் முதலில் யோசித்தது கோயம்பத்தூர் டீமை எப்படியாவது வாங்க வேண்டும் என்றுதான், ஆனால் நாங்கள் 3வது இடத்தில் இருந்ததால் எங்களுக்கு முன்னே இருக்கும் 2 பேர் அந்த பெயரை சொல்லக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தேன், அதேபோல் கோயம்பத்தூர் டீம் எங்கள் லைக்காவுக்கு கிடைத்தது. கோயம்பத்தூர் மிகவும் அழகான ஊர் இங்கிருக்கும் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பத்துக்குள்ளேயே என்னங்க, ஏனுங்க என்று பேசும் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதுமட்டுமின்றி இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு இந்திய சூப்பர் ஸ்டாரை நாங்கள் சென்று சந்தித்தோம். அப்போ அவர் சுபாஷ்கரன் சாரிடம் பேசுகையில் மீண்டும் எப்போது லண்டன் செல்கிறீர்கள் என்று கேட்டார். அப்போதுதான் நாங்கள் கோயம்பத்தூர் செல்லும் விஷயத்தை பற்றி கூறினோம். TNPL பற்றியும் எங்கள் அணியின் Anthem வெளியீடு செய்யப் போவதாக ரஜினி சாரிடம் கூறினோம். அப்போது அவர் சொன்னது “சூப்பர்ங்க, கோயம்பத்தூர் ரொம்ப அருமையான இடம் One of Best Place in Tamilnadu என்று கூறினார்” அதை கேட்கும்போது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று ராஜு மகாலிங்கம் கூறினார்.

“என்னங்கோ, ஏனுங்கோ என்று தொடங்கும் அந்த Anthem பாடலை Lyca Chairman சுபாஷ்கரன்” வெளியிட்டார்”..

Leave a Response