Percy Jackson : Sea of Monsters – விமர்சனம்:

pj-sea-of-monsters

2௦1௦-ல் வெளியாகி 2௦௦ மில்லியன் டாலர்களை வசூலித்த ஹாலிவுட் படம் PERCY JACKSON & THE OLYMPIANS: LIGHTNING THIEF. இந்த படத்தினை கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. இந்த படத்தின் கதை பிரபல நாவலாசிரியர் RION RIORDONS-ன் புத்தகத்தை தழுவி எடுக்கபட்டது தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகி உள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

கற்பனையும், அதிரடி ஆக்ஷனும் கலந்து மிக சிறந்த கிராபிக்ஸ் உத்திகளோடு இந்த படத்தை உருவாக்கியுள்ளவர் THOR FRUENTHAL. முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார்.

படத்தின் கதைப்படி பெர்சி ஜாக்சன், கிரேக்க கடவுளான பொசைடனின் மகன். CAMP HALF-BLOOD எனப்படும் தமது கோட்டையின் பாதுகாப்பு சின்னமும், பாதுகாப்பு சாதனங்களும் வலிமை குன்றி போகின்றன. அதன் காரணங்களை அறிய முற்படும் முற்போக்கு மாணவனான பெர்சி, பாதி கடவுள் பாதி மனிதன் என்கிற வடிவில் அதாவது Demi-God என அழைக்கப்படும் சகாக்களுடன் Sea of Monsters எனப்படும் BERMUDA TRIANGLE கடற்பரப்பிற்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

அங்குள்ள “GOLDEN HALF FLEECE” ஐ கண்டுபிடித்து கொண்டுவந்தால் தான் கோட்டையின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும் என்ற சூழ்நிலையில் அவர்கள் அதனை கண்டுபிடித்து கொண்டு வந்தார்களா? அதன் பின் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

படத்தின் முக்கிய அம்சம் கிராபிக்ஸ். அதனை சரியாக பொருத்தி விடுகிறார்கள் vfx designers. கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளாகட்டும், அந்த முதல் காட்சிகளில் வரும் மிருகங்கலாகட்டும் அனைத்தும் அற்புதம். படகு சவாரி, கடல் மிருகங்கள் ஆகியவையும் சூப்பர்.

Sean bean, Alexandra dadderiog, Douglas smith, Leven rambin, Jake abel, Robert maillet  ஆகியோரும் தங்களது வேடங்களில் தோன்றி சிறப்பாக செய்து அசத்தியுள்ளனர்.