ரஜினியிடம் ஆசி பெற்ற ராஜா ராணி இயக்குனர்!

37000_1510354438206_3684551_n

ராஜா ராணி படத்துக்கு சமீப நாட்களாக ஏகப்பட்ட பப்ளிசிட்டி. படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று பரபரப்பு கிளப்பி, இருவரும் சர்ச்சில் திருமணக் கோலத்தில் இருப்போது போல படங்களையும் வெளியிட்டனர். அடுத்து படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு பப்ளிசிட்டி செய்தனர்.

இப்போது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை பழைய எல்பி ரிகார்டு வடிவில் அச்சடித்துள்ளனர். இந்த அழைப்பிதழை இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கொடுத்து ஆசி பெற்றார் இயக்குநர் அட்லீ. புதிய இயக்குநரான அட்லீக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.