படகு வீட்டில் படமான அழகு மகன்!

_DSC1119

அவதார் மூவீஸ் ஆர்.செல்வி, தாருண் கிரியேசன்ஸ் ஞானதேஸ் அம்பேத்கார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “அழகு மகன்“. இந்த படத்தில் உதய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார். ஜி.எம்.குமார், பவன், ராஜ்கபூர், இளவரசு, சிந்தியா, சிங்கம் புலி, நாடோடி கோபால், விஜி, நித்திஸ் மற்றும் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்

ஒளிப்பதிவு – அக்கு அஜ்மல். இசை – ஜேம்ஸ் வசந்தன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அழகன் செல்வா .இப்படத்திற்காக சமீபத்தில் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது

“என்ன என்ன இது தேன்மழை!

சிந்துதே கால்வரை

பொங்குது  பூநுரை” என்ற பாடல் காட்சி கேரளாவில் ஆலப்புழா என்ற இடத்தில் படகு வீட்டில் படமாக்கப்பட்டது.

“மனசுல மனசுல  இருக்குறே!

மனசையும் கயிறா திரிகிறே“ என்ற பாடல் காட்சியில் உதய், மாளவிகா வேல்ஸ் மற்றும் ஞானதேஸ் அம்பேத்கார் நடிக்க கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. தெக்கத்தி மக்களின் கலாசார பதிவாக “அழகு மகன்” உருவாகிறான்.