புதுமுக பட்டாளமே நடிக்கும் செண்பகா!

Senbaga

KPD மூவி மேக்கர்ஸ் என்னும்  நிறுவனம் முற்றிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி செண்பகா என்னும் படத்தினைத் தயாரித்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக புதுமுகம் அறிமுகம் மதன், கதாநாயகிகளாக பாக்யஸ்ரீ, நந்தினி இவர்களுடன் அப்பு, புனிதம், அருள், தினேஷ், ஞானமணி என்று பெரிய அறிமுகப் பட்டாளமே நடிக்கின்றது.

படத்தைப் பற்றி இயக்குனர் விக்ரம் ரஜினி கூறும்போது, “சமூக மாற்றத்திற்கான புதிய முயற்சிகளுடன் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கிராமத்து வாசனை கலந்த படமாக செண்பகா இருக்கும்..” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம், சேத்தியாதோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள  கிராமங்களிலும்  திருவையாறு, பின்னலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

அறிமுக இசையமப்பாளர் எஸ்.பி.கஜேந்திரன் இசையில் அற்புதமான 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சண்டைக் காட்சிகளும் புதுமையான சேஸிங் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.