RED 2 – விமர்சனம்!

exclusive-red-2-poster-135341-a-1369126379-1000-755 (1)

2010-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற RED என்ற ஆக்ஷன் படத்தின் இரண்டாவது பாகம் தான் இந்த RED 2. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை இரண்டு படங்களை கொடுத்துள்ள Bruce Willis-ன் மூன்றாவது வெளியீடு. இந்த படத்தில் Frank Moses என்ற ஓய்வு பெற்ற C.I.A அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் Bruce Willis.

படத்தின் கதை என்னவென்றால், ஓய்வு பெற்ற ஏஜென்ட்களான புருஸ் வில்லிஸ் மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன நியூக்ளியர் ஆயுதத்தை தேடி அழிக்கும் பொறுப்பு புருஸ் வில்லிஸ் வசம் வருகிறது. இதற்காக அவர் தனது குழுவினரை அழைத்து அவர்களின் உதவியோடு அந்த ஆயுதத்தை தேடி கண்டுபிடிக்க கிளம்புகிறார். அவரது குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம்.

இந்த தேடுதலில் அவர்கள் லண்டன், பாரிஸ், மாஸ்கோ என பல நகரங்களுக்கு சதிகாரர்களை தேடி பயணிக்க வேண்டி வருகிறது. ஒவ்வொரு முறையும் எதிரிகளிடமிருந்து தப்பி எப்படி அந்த ஆயுதத்தை கண்டுபிடிக்கிறார்கள், எப்படி அதனை அழித்தார்கள் என்பதை திரைக்கதையாக்கி சொல்லியிருக்கிறார்கள்.

புருஸ் வில்லிஸ்-ன் அபாரமான நடிப்பு படத்தினை மேலும் மெருகேற்றுகிறது. அதோடு அவரின் நண்பர்களாக வரும் John Malcovich, Mary-Louise parker, Catherine zeta jones ஆகியோரும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர். Antony Hopkins ரசிக்க வைக்கிறார்.

Jon மற்றும் Erich Hueber ஆகியோரின் திரைக்கதையில் ஆக்ஷன் மட்டுமின்றி, காமெடியும் கலந்து ரசிக்கும் விதத்தில் இயக்கியுள்ளார் இயக்குனர் Dean Parisot. Die Hard மற்றும் G.I.Joe படங்களை அடுத்து மீண்டும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு படத்தை கொடுத்து வெற்றி பெறுகிறார் புருஸ் வில்லிஸ்.