போலீஸ் கிரியை ரிலீஸ் பண்ணும் தேனாண்டாள் பிக்சர்ஸ்!!

Policegiri Poster 3

தமிழில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் சாமி. இந்த படத்தை இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். இந்த படத்தில் சஞ்சய் தத் நாயகனாக நடிக்கிறார். பிராச்சி தேசாய் நாயகியாக நடிக்கிறார். அசத்தலான வில்லன் பெருமாள் பிச்சை கதாபத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஹிமேஷ் ரேசமியா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சஞ்சய் தத் சிறைக்கு செல்லும் முன் நடித்த கடைசி படம் இது என்பதால் இந்தியில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூலை 5ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் ராமநாராயணனின் மகன் ராமசாமி 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறார்.