சிம்புவுக்கு ரெட்? ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல்??

சிம்பு நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி பொங்கல் ரிலீசுக்கு நிலையில் உள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தை மதவ் மீடியா சார்பாக பாலாஜி காப்பா தயரித்துள்ளார். குறுகிய காலத்தில் தயாரான இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த மாதம் 14ம் தேதி வெளியாக தயார் நிலையில் உள்ளது. ரிலீஸ் தேதி அறிவிப்புடன் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது.

சிம்பு இரு வருடங்களுக்கு முன்பு நடித்த ‘அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தில் நடித்தார். அப்படம் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த நஷ்டத்திற்கு ஈடாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு அடுத்து அவர் தயாரிக்கும் திரைபடத்தில் இலவசமாக நடித்து தருவதாக சிம்பு வாக்கு கொடுத்திருந்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் அவருடைய அடுத்தடுத்து படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இப்படிப்பட்ட சூழலில் முன்பு ரிலீசாகிய சிம்புவின் ‘வந்த ராஜாவாதான் வருவேன்’ என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆவதில் சிக்கலை சந்தித்தது. அப்போது சிம்பு தான் நடித்து அடுத்து வெளியாகும் திரைப்படத்தில் மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்கவேண்டிய பண பாக்கியை கொடுத்து விடுவதாக வாக்கு அளித்தார். அதன் அடிப்படையில் தான் அந்த ‘வந்த ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியது.

இதுவரை மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்க வேண்டிய பண பாக்கியை சிம்பு கொடுக்க தவறியதால், மைக்கேல் ராயப்பன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இது சம்மந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு மற்றும் சிம்பு சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி வந்தது. இந்நிலையில் சிம்புவிடமிருந்து பணமோ அல்லது சரியான பதிலோ வரவில்லை. இதன் காரணமாக,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, இந்த பிரச்சனை தொடர்பாக விவரித்தது. மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு தான் தரவேண்டிய பணத்தை கொடுத்தால் மட்டுமே, ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடுவதற்கான ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்க முடியும் என்று சொல்லிவிட்டது. இந்த தடையில்லா சான்று வழங்கினால் மட்டுமே இப்படத்தினை Qube போன்ற டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்கள் படத்தின் KDM அளிப்பார்கள். அந்த KDM கிடைக்கப்பெற்றால் தான் திரையரங்கில் படம் வெளியிடமுடியும்.

தற்போது வரை சிம்பு இந்த பிரச்சனை சம்மந்தமாக சரியான முடிவுக்கு வராததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சிம்பு படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க போவதில்லை என்று முடிவெடுத்து உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதே சமயம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கும் “ஈஸ்வரன்” திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் இருக்கிறது.

தற்போதுள்ள சூழலை பார்க்கும்போது ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகுமா என்பது ஒரு கேள்விக்குறியே!.

Leave a Response